?ஹம்பாந்தோடை- திஸ்ஸமகாராமய வாவி ஆழப்படுத்தி துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் சீன இராணுவத்தினர் இல்லை எனவும் அவ்வாறான ஆடையினை அணிந்தவர்கள் தொழிலாளர்கள் எனவும் இதை அறிந்தும் திசைதிருப்பும் வகையில் News1st தலைப்பு செய்தியாக அறிக்கையிடுவதாக சீன தூதரகம் ருவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த செயற்திட்டம் இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். -சிறைச்சாலை ஆணையாளர் –

இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து ஒருவருமாக 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 77 கைதிகளும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் […]

?முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், அவர் நாட்டில் இருந்தால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்காது என அண்மையில் கூறியிருந்த நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார்.

?சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் அங்கு பணிபுரிபவர்கள் வித்தியாசமான ஆடைகள் அணிந்து பணிசெய்ததாகவும் இவை சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் இந்த ஆடைகளை ஒப்பிட்டுக் கூற முடியும் என சக்தி, சிரச, எம்.ரி.வி. செய்தி வெளியிட்ட நிலையில் ,.. சீன தூதரகம் இது தொடர்பில் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளது. சீன நிறுவன பணியாளர்கள் அணிந்திருப்பதை ஆடையை […]

நாட்டின் ஆட்சியில் இராணுவத்தினர் உள்நுழைந்து செயற்படுவது தவறு-ரணில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று முதல் நாளில் உரையாற்றும் போது இலங்கையின் கொவிட் தடுப்பு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் இதில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இலங்கையிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் வகுத்த திட்டங்கள் யாவை? கொரோனா வைரஸ் பரவல் செயலணியை மட்டுமே உருவாக்கி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த […]

அப்பாவும் , சித்தப்பாவும் முடிவு எடுத்தால் தடுப்பில் உள்ளவர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கலாம்

23/6/2021: ??பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்?? பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பாராளுமன்ற கூடியிருந்ததுடன், இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

? மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஜுலை 6 வரை விளக்கமறியல்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதி உயிரிழந்ததையடுத்து மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu