மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (01) முதல் ஆரம்பிக்கவுள்ளது

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

எதிர்வரும் 2ம் திகதி முதல் அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அரச ஊழியர்களுக்கு பணிக்கு செல்லும் வகை, காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்துக்களை மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இடைப்பட்ட காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தற்போதைய சூழ்நிலையில் ஆரம்பிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் நிலைமை காணப்படுகின்றமையினால், சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்

Next Post

கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையெனில், பஸ்களில் நாளை முதல் இரண்டு மடங்கு கட்டணம்?

Sat Jul 31 , 2021
கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையெனில், பஸ்களில் நாளை முதல் இரண்டு மடங்கு கட்டணம்? ஒரு மருந்தளவு கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பஸ்களில் பயணிக்கும் போது, சாதாரண பஸ் கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான பஸ் கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் #கெமுணு #விஜேரத்ன தெரிவிக்கின்றார். மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படுகின்றமை குறித்து கருத்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu