,,சிறுவர்கள் ஆபத்தான கட்டத்தில்: வைத்தியர்கள் விடுக்கும் மிக முக்கிய எச்சரிக்கை!

,,சிறுவர்கள் ஆபத்தான கட்டத்தில்: வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து இதுவரை கொவிட் காரணமாக 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உடனே கொரோனா அறிகுறிகள் வெளிக்காட்டாமல் இரு வாரங்கள் கடந்த பின்னர் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, கண்கள் சிவத்தல், வாந்தி போன்ற நிலைமைகள் ஏற்படும்.

இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானித்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் மேலும் கோரியுள்ளார். இந்த நிலைமைகளின் காரணமாக உள் உறுப்புகள் வீக்கமடைய வாய்ப்புள்ளதாகவும், இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு உள்ளான ஐந்து சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நோய் அறிகுறிகளால், சிறுவர்கள் உயிரிழக்கக்கூடிய நிலைமை உருவாக வாய்ப்புகள் இருப்பதால் பெற்றோர் மற்றும் வளர்ந்தோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.

News editor DIVYA

Next Post

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு, பல காலமாக பாலியல் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது

Sat Jul 17 , 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் கடமையாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு, பல காலமாக பாலியல் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இந்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu