சமீபமாக அதிகம் பேசப்படும் ஒரு ஊடகவியலாளர் இவர் பெயர் புவனேஷ் பிறப்பிடம் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை ஓரிரு நாட்களில் சமூகவலைத்தளங்களில் மட்டுமல்லாது இணையதளங்களிலும் முகப்புத்தகத்திலும் அதிகமாக இவரின் புகைப்படம் பகிர்வதை காணக்கூடியதாக இருக்கின்றது இதற்கு காரணம் இவருடைய மனிதாபிமான செயல்
மனிதனைத் தாக்கும் கொடிய நோய் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து எம்மை நாம் பார்த்துக் கொள்வதே பெரிது இந்தக் காலகட்டத்தில் நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொள்வோம் காரணம் மற்றவர்களிடமிருந்து இந்தத் தொற்று நோய் எமக்கும் வந்துவிடும் என்று பயம் இவ்வாறு இருக்கும்போது தான் வழமைபோல எட்டியாந்தோட்டை தனது வீட்டிலிருந்து அறிவிப்பாளர் புவனேஷ் அவர்கள் வசந்தம் வானொலிக்கு மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்கிறார் செல்லும் வழியில் துரதிஷ்டவசமாக தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி தந்தைக்கு உயிர் ஆபத்தான நிலையில் பலர் சூழ்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் மகன் தந்தையை நோக்கி காதலர் அழுத கண்ணீர் விட்டு அழுவது இந்த ஊடகவியலாளர் காண்கிறார் உடனடியாக இவர் மனம் இரங்கி அந்த இடத்துக்குப் சென்று விசாரித்து பார்க்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இவருக்கு கூறியிருந்தார்கள் இவர் இறந்ததாக இவர் பார்க்கும் தருணத்தில் அங்கிருந்த மக்கள் தொலைபேசியில் புகைப்படங்களை எடுப்பதோடு யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை காரணம் உயிர் போய்விட்டது என்று நினைப்பில் ஆம்புலன்ஸ் வண்டி வரும் வரை அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இத்தருணத்தில் இந்த இளம் வயது ஊடகவியலாளர் புவனேஷ் அவர்கள் அஞ்சாது மனமிரங்கி அடிபட்டு சுயநினைவின்றி இருக்கும் அந்த வயோதிபர் இடம் என்று கையை பிடித்து தொட்டு பார்க்கிறார் மன நம்பிக்கையில் இவர் இன்னும் உயிர் பிரிய வில்லை என்று இவருக்கு தெரிந்த சில முயற்சிகளை எடுத்து சுவாசப்பாதை இருக்கும் இடத்தில் நெஞ்சில் மேல் கையை வைத்து இறுக்கமாக அழுத்தி நம்பிக்கையுடன் மரணத்திடம் மரணத்திடம் போராடுகிறார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இவரை சூழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் மரணத்தோடு மன நம்பிக்கையில் இன்னும் இறுக்கமாக நெஞ்சின் மேல் கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்த வயோதிபர் இருக்கமாக மூச்சிழுத்து இருமியதை கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறார் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதர்களும் புதுமை அடைந்தனர் அந்த வயோதிபரின் மகனும் நன்றி சொல்லக் கூட துணிவில்லாமல் ஆனந்தத்தில் சகோதர மொழியில் ஓரிரு வாழ்த்துக்களையும் நன்றியையும் தனது இரு கரங்களையும் கூப்பி தெரிவித்திருந்தார் அங்கிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்கள் இதுதான் மனிதாபிமானம் அந்த சந்தர்ப்பத்திலேயே ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து பலத்த காயங்களுடன் இருந்த அந்த வயோதிபரை தீவிர சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு ஏற்றி சென்றது
மூச்சை இழுக்க மறந்தால் மரணம்.இழூத்த மூச்சை விட மறந்தால் மரணம்.இவ்வலவுதான் வாழ்க்கை…
இவரின் எண்ணம் இவர் போல் எவருக்கும் வருவதில்லை இலகுவில் காரணம் ஒரு பக்கம் பயம் காப்பாற்ற சென்று பொலீஸ் விசாரணை எம்மையும் பின்தொடரும் என்று எதற்கு நமக்கு வம்பு என்று கண்டும் காணாமலும் செல்லும் காலமிது
உயிரே இல்லை என பலர் கூறியும் அந்த வயோதிபரை காப்பாற்றியவர்
தெய்வங்கள் மனித ரூபத்தில் இருப்பதை உணர முடிகிறது இவர் போன்ற நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கும் போது
இன்றைய தினம் ஊடகவியலாளர் புவனேஷ் அவர்கள் அலுவகத்தில் இருந்து விபத்தில் அடிபட்டு கிடந்த அவரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்துள்ளார் அவர் சென்றிருந்த வேளையில் உறவினர்கள் மட்டுமே வீட்டில் இருந்து இருக்கின்றார்கள் மகன் தந்தையுடன் வைத்தியசாலையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி இருக்கின்றார் அந்த சந்தர்ப்பத்திலும் அவர் நன்றி தெரிவித்து தந்தை பூரண குணமாகி வீடு திரும்பியதும் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
இதனால்தான் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர் புவனேஷ் அவர்களுக்கு இன்றும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கின்றது சமூக வலைத்தளங்களில்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களும் இவருக்கு முகப்புத்தகத்தின் வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார் நானும் எனது எழுத்துக்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து இவர் போன்று இளம் சமுதாயம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் இடத்தில் முன்வர வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு இன்று ஊடகவியலாளர் புவனேஷ் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
ருவான்வெல்ல ரொஷான்
வசந்தம் வானொலி ஊடகவியலாளர் புவனேஷ் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு இவ்வாறு
நேற்று இரவு 10 மணியளவில் சம்பவம்..
“நான் வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அதுருகிரிய பாதையில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்துநின்றதை கண்டு.
நானும் அருகில் சென்றேன்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு லொறியில் மோதி இரத்தம் ஓட விழுந்து கிடப்பதையும் பின்னால் வந்த சுமார் 18 வயதுடைய மகன் கதறி அழுவதயும் கண்டேன். அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் உயிர் போய்விட்டது என்று எனக்கு ஒரு சந்தேகம் .
அருகில் சென்று நாடித்துடிப்பை பார்த்து துடிப்பு இருப்பதை அறிந்து நான் உடனே மற்றவர்களை விலக சொல்லி மார்பு பகுதியை அழுத்தி அழுத்தி பக்கத்தில் இருந்தவரை விழுந்து கிடப்பவரின் வாயில் காற்றை அனுப்ப சொல்லி விடாமல் முயற்சித்தேன் ஒரு 10 நிமிடம் என்னுடைய முயற்சி தொடர ஒரு சிறிய இருமலோடு அசைய ஆரம்பித்தார். உடனே எனக்கு தெரிந்த வைத்திய நண்பர் ஒருவரை தொடர்புகொள்ள முயற்சித்தேன் அவர் அழைப்பில் இல்லை.
அவரக்கு என்னால் முடிந்த வார்த்தைகளை சொல்லி சொல்லி சமாதான படுத்த ஆம்புலன்ஸ் வந்தடைந்தது இடத்திற்கு .
உடனே அவர்கள் அவர்களுடைய சேவையை ஆரம்பித்தனர் .
அந்த மகன் உட்பட அங்கு இருந்தவர்கள் என்னிடம் கைகூப்பி கும்பிட்டு ” ஒயாட கோடாக் பிங் மஹத்யா ” என்று சொல்ல கண்கள் கலங்கியது.
நான் சொல்வது அங்கு முதல் உதவி பற்றி பலருக்கு தெரிந்து இருந்தாலும் கூட முன்வர யோசித்து இருப்பார்கள். அல்லது தெரியாமல் இருந்திருக்கும் .
என்னுடைய யோசனை வாகன அனுமதி பத்திரம் பெரும் போது இதுபோன்ற விடயங்களில் கூடுதலான கவனம், பரிட்சை கேள்விகளில் இவ்வகையான கேள்விகள் அதிகமாக சேர்த்தால் காப்பாற்ற முடிந்த உயிர்களை மீட்கலாம் .
காரணம் அதிகமான ஆபத்தான நேரங்களில் எம்மிடம் குறைந்தது ஒரு சாரதி இருப்பார்.
மனிதனின் மரணத்தை கடவுள் மட்டுமே தீர்மானிக்க முடியும் மனிதர்களுக்கு முடியாது என்பதை நிரூபித்த ஊடகவியலாளர் புவனேஷ்
நானும் ஒரு செய்தி நிருபர் என்ற வகையில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி
ருவான்வெல்ல ரொஷான்