மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வயல் காணிக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

செங்கலடியை சேர்ந்த 53 மற்றும் 56 வயதான இருவரே விபத்தில் சிக்கியுள்ளனர்.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Next Post

எரிபொருள் சரக்கு கப்பல் இன்று காலை வருவதாக இருந்த நிலையில் ஒரு நாள் தாமதமாகியுள்ளது. நாளையே வரும்.

Thu Jun 23 , 2022
பெற்றோல் ஒக்ரெய்ன் 92 இன் 40,000 மெற்றிக்தொன் எரிபொருள் சரக்கு கப்பல் இன்று காலை வருவதாக இருந்த நிலையில் ஒரு நாள் தாமதமாகியுள்ளது. நாளையே வரும். இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விநியோகிக்கப்படும். முழு கொள்வனவிற்கு ஓட்டோ டீசல் விநியோகம் இடம்பெறும்- அமைச்சர் காஞ்சன விஜேசேகர-

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu