இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ரொய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 70.2 வீதத்தை எட்டியுள்ளதாகவும், உயர் பணவீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த சவாலான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு, கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நிறைவேற்றுச் சபையின் அனுமதியைப் பெறுமென தாம் நம்புவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை நிறைவு செய்த பின்னர், இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

Next Post

கொட்டகளை தமிழ் பாடசாலை மாணவியை விரட்டி விரட்டி தும்புத்தடியால் தாக்கிய அதிபர்..!!

Thu Sep 29 , 2022
Thursday, September 29, 2022 பாடசாலை அதிபர் ஒருவர் மாணவி ஒருவரை தும்பு தடியால் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டக்கலை போகாவத்தை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது இதனை தேடல் ஊடகம் கொட்டகலை பொலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர் தும்புதடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu