அலரிமாளிகையில் கடந்த 09ஆம் திகதி இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கொழும்பு கோட்டை நீதவான் திரு திலான கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேவேளை கடந்த 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் மேலும் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மின்சார ironbox திருடிய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.