ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது
உலக கோப்பை கால்பந்து (2022) இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
36 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது அர்ஜென்டினா.
உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது
பிரான்ஸ் மற்றும் ஆஜன்டீனா அணிகள் இன்று இறுதி போட்டியில் களமிறங்கின.
ஆஜன்டீனா அணி சார்பில் லயனல் மெஸி, 22வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆஜன்டீனா அணி சார்பில் டி மரியா இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
ஆஜன்டீனா அணி, 36வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டு, போட்டியின் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது.
பிரான்ஸ் அணி வீரர் ம்பஃவே 80 மற்றும் 81வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்தார்.
90 செக்கன்களுக்குள் இந்த இரண்டு கோல்களையும் பிரான்ஸ் அணி பதிவு செய்திருந்தது.
போட்டி நேரம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் இரு அணிகளும் 2க்கு 2 என்ற சமமான கோல்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
முதலாவது மேலதிக நேரத்தில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பதிவு செய்யவில்லை.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
இரண்டாவது மேலதிக நேரத்தில் லயனல் மெஸி, 108வது நிமிடத்தில் மூன்றாவது கோலை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி சந்தர்ப்பத்தில், ம்பஃவே 118வது நிமிடத்தில் கோலை போட்டு, மீண்டும் போட்டியை மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் சமநிலைப்படுத்தினார்.
இரண்டாவது மேலதிக நேரத்தில் மீண்டும் போட்டி சமநிலையில் காணப்பட்டதை அடுத்து, பெனால்டி முறையில் போட்டியை தொடர தீர்மானிக்கப்பட்டது.
பிரான்ஸ் முதலாவது பெனால்டி சந்தர்ப்பத்தை நாணய சூழற்சி மூலம் பெற்றுக்கொண்டது.
பெனால்டி முறையில் ஆஜன்டீனா 3 (04) என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
பிரான்ஸ் அணி (02) 3 கோல்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, ஆஜன்டீனா அணி உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது