அலுவலக பணியாளர்களின் நலன்கருதி மற்றுமொரு ரயில் சேவை

அலுவலக பணியாளர்களின் நலன்கருதி மற்றுமொரு ரயில் சேவை யாழ்ப்பாணத்திற்கும்-அநுராதபுரத்துக்கும் இடையில் இன்று (04) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த ரயில் காங்கேசன்துறையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கும் வவுனியாவுக்கு 7 மணிக்கும் சென்றடைவதுடன் இரவு 8.30 மணிக்கு அநுராதபுரத்துக்கு செல்லவுள்ளது.

இதேவேளை அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புறப்படும் ரயில் காலை 5 மணிக்கு தனது பயணத்தை அநுராதபுரத்திலிருந்து ஆரம்பித்து காலை 6 மணிக்கு வவுனியாவையும் காலை 8.05 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்து காலை 8.35 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது.

Next Post

அதிகளவில் பயணிகளை ஏற்றும் பேருந்தின் சாரதி நடத்துநர்கள் இனி கைது செய்யப்படுவார்கள்

Wed Aug 4 , 2021
ஆசன எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறு காவல்துறை பொலிஸ்மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நாளை முதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகளவில் பயணிகளை ஏற்றும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறும் , அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu