முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பூதவுடலை தோண்டி எடுக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஷாலினியின் சடலம் எதிர்வரும் 30ம் திகதி தோண்டி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பு − புதுகடை நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இந்த சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தோண்டி எடுக்கப்படும் சடலம் மீதான 2வது பிரேத பரிசோதனைகளை 3 பேர் அடங்கிய விசேட வைத்திய குழு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து, மீண்டுமொரு முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இந்த சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது