ராணுவத் தளபதியின் அறிவிப்பு

கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்ய வேண்டியுள்ளமையினால், அருகாமையிலுள்ள கொவிட் தடுப்பூசி செலுத்து நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். கொரோனா பரவலை தடுப்பதற்கு காணப்படும் ஒரே வழிமுறை தடுப்பூசி பெற்றுக்கொள்வது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்

Next Post

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4000தை இன்று தாண்டியது.

Fri Jul 23 , 2021
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4000தை இன்று தாண்டியது. நேற்றைய தினம் 43 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4002ஆக அதிகரித்துள்ளளதென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

You May Like