கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நாகஸ்தென்ன தோட்டத்தில்
அரசாங்கத்துக்கு சொந்தமான JDBE நாகஸ்தென்ன தோட்டத்தில் 700 ஏக்கர் தனியாருக்கு கொடுப்பதாக தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதனை எதிர்த்து தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களுக்கு குத்தகைக்கு விவசாயம் செய்ய கொடுத்த நிலங்களில் 15 வருட காலமாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களை தோட்ட நிர்வாக அதிகாரி இவர்களுக்கு விவசாயம் செய்ய விடாமல் வேலைநிறுத்தம் செய்துள்ளார் 15 வருட காலம் விவசாயம் செய்து வந்த இவர்களின் நிலங்களில் இவர்களை தேயிலை பறிக்க விடாமல் வேலை நிறுத்தம் செய்து தோட்ட அதிகாரி வேறு தொழிலாளிகளை அந்த நிலங்களில் கொழுந்து பறிக்க வைக்கிறார் என்று மக்கள் கவலை கூறினர் இதனால் மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து பெரும் துயருக்கு ஆளாகியதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் மக்கள் கூறுவது என்னவென்றால் 15 வருட காலமாக விவசாயம் செய்து வந்த நிலங்களை தமக்கே வழங்குமாறு கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை மக்கள் எட்டியாந்தோட்டை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவர்களுக்கு மக்கள் தெரிவித்த பின் இதனை அவர் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு தெரிவித்து அவரின் ஆலோசனைக்கு இணங்க எட்டியாந்தோட்டை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் உடனடியாக மாலை நாகஸ்த்தென்ன தோட்டத்துக்கு விஜயம் செய்து அவர் தொட்ட அதிகாரிகயுடன் கலந்துரையாடி மக்களுக்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்