தெமட்டகொட ரயில் நிலைய யாட் பகுதிக்குள் பராமரிப்பு பணிக்காக வந்த ரயில் தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ரயிலை செலுத்தி வந்த ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்த பணியாளர்கள் , எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.