பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் கடமையாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு, பல காலமாக பாலியல் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இந்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்