டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் இலங்கையில் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு உட்பட்ட ஹிரிகல்கொடெல்ல பகுதியை சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கு இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது