டிசம்பர் 31. 2023 க்குள் தாமரை கோபுரத்தை மையப்படுத்தி அங்கிருந்து மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தாமரை கோபுரம் மற்றும் ஏனைய 16 ஒலிபரப்பு கோபுரங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.
2021 டிசம்பரில் ரீவி சனல்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாங்கள் செல்லவிருந்தோம், ஆனால் செயல்முறையைத் தொடங்க முடியவில்லை. எவ்வாறாயினும், ஜப்பானிய உதவியுடன் நாங்கள் இப்போது அதை ஆரம்பித்துள்ளோம்,என்று அமைச்சர் மேலும் கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கல் முழுமையாக செயல்படுத்தப்படும் போது அனைத்து பார்வையாளர்களும் தங்கள் தொலைக்காட்சி மூலம் தரமான படங்களை குறைந்த கட்டணத்தில் பெற முடியும் என்று அவர் கூறினார்.