முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் ரோஹணவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன