நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருமாறு விமான சேவை நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நாளொன்றுக்கு சராசரியாக 105 விமானங்கள் இலங்கைக்கு வந்து செல்வதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி Nethfm செய்திக்கு தெரிவித்தார்.
தினமும் குறைந்தது 10,000 விமானப் பயணிகள் நாட்டிற்கு வந்து செல்கின்றனர். நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்களின் அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.