எயார்-இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் வெளியேற முடியாமல் சிக்கி தவிர்த்த நிலையில், 18,000 கோடிக்கு எயார்-இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் இன்று தன்வசப்படுத்தியுள்ளது.
68 ஆண்டுகளுக்கு முன் டாடாவிடமிருந்து பெற்று அரசுடைமையாக்கப்பட்ட எயார்-இந்தியா மீண்டும் டாடவிடமே கைசேர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த அரசுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை ஏலத்தின் மூலம் அரசு டாடா குழுமத்திடம் ஒப்படைத்திருக்கிறது.
இதுகுறித்து, ருவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரத்தன் டாடா, ஜே.ஆர்.டி. டாடாவின் கீழ் மிகவும் மரியாதையாக இயங்கி வந்த எயார்-இந்தியாவை மீண்டும் அதேநிலைக்கு உயர்த்துவோம் என தெரிவித்துள்ளார்