லிட்ரோ நிறுவனத்திற்கு தற்காலிக எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனமாக ஓமன் வர்த்தக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் எரிவாயு கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமன் டிரேடிங் நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை வழங்க 129 அமெரிக்க டொலர் கோரியுள்ளது.