நடிகை நயன்தாரா மீது விசாரணை செய்யப்படும்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.

நேற்று தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுடைய ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டார்.

இந்த ட்வின்ஸ் குழந்தைகளை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சட்டத்தின் விதிகளை மீறி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

விதிமுறைகளின்படி, திருமணமாகி 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும்.

தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதல் கட்டாயம்.

ஒரு பெண் ஒரு முறை தான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.

வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். என இத்தனை விதிகள் உள்ளன.

இந்த விதி முறைகளை மீறி எப்படி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” நயன்தாரா, விக்னேஷ்சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்…விதி முறைப்படி நடந்ததா என விளக்கம் கேட்கப்படும். விசாரிக்கப்படும் ” என்று கூறியுள்ளார்.

Next Post

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஏழு பிராந்திய வானொலி தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Mon Oct 10 , 2022
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கதுரட்ட, ருஹுனு, மேற்கு மற்றும் ரஜரட்ட உள்ளிட்ட ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்தாலும் ஒரே நிறுவனமாகப் பராமரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது, ​ கூட்டுத்தாபனம் மற்றும் அதன் பிராந்திய வானொலி நிலையங்கள் திறைசேரி நிதியில் இயங்குகின்றன.

You May Like