இந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஓரிரு வாரங்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை சுமார் 250 ரூபா வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தற்போது 100 கொள்கலன்களில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு கப்பலில் இருந்து இறக்கப்பட்டுள்ளது.
மேலும் டுபாய், துருக்கியில் இருந்தும் கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதால் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய சற்று தாமடைந்துள்ளது அவையும் விரைவில் வந்தடையும் என்றார்.