தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளரூடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, உரிய பாதுகாப்புகளை வழங்க முடியும் என தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, தேர்தலுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை மாத்திரம், தேர்தல் தாமதமடையும் காலப்பகுதிக்குள் வழங்குவது பொருத்தமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை அனுமதிக்காது என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

Sun Mar 12 , 2023
மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை அனுமதிக்காது என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன. மறுசீரமைப்பு என்ற போர்வையில் அமைச்சர் அதற்கு தயாராகி வருவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் இறுதி சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக எதிர்வரும் வாரத்தில் இருந்து மின்சார சபையில் மேற்கொள்ளப்படக்கூடிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதும், நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu