கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல வகையான காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கத்தரிக்காய், கேரட், நோகோல், தக்காளி ஆகியவற்றின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் மொத்த விலையில் சிறிது குறைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சில்லரை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். மழை குறைந்துள்ளதால் சந்தைக்கான காய்கறிகள் மீண்டும் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் காய்கறிகளின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.