இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் சத்தான உணவை இழந்துள்ளனர்

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் கொரோனா தொற்று பரவியதில் இருந்து சத்தான உணவை இழந்துள்ளனர் என உணவு உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பத்து மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு அந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்களில் 71% பேர் குறைந்த விலையுள்ள உணவை உண்டதாகவும், 69% பேர் வாரத்திற்கு ஐந்து வேளை உணவை உண்ணாதவர்களாகவும் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

14% பேர் ஒரு நாள் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட சாப்பிடவில்லை என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

Next Post

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது. 

Fri Oct 29 , 2021
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட் செயலணி, முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், ?மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. ?பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம். ?உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானம். ?தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம். ?சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள் எடுத்தல். ?மக்களிடத்தில் […]

You May Like