முன்னணிப் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவி ஒருவர், தான் காதலிக்கும் மாணவர் ஒருவருக்கு பெற்றோரிடமிருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்து, அவரது பிறந்தநாளில் வகுப்பறையில் பீர் விருந்து வைத்துள்ளார். இச்சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அறிந்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சென்று பார்த்தபோது விருந்து வைத்த பீர் , பிஸ்கட், கேக் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக பெற்றோர் அழைக்கப்பட்டு இவற்றை தெரியப்படுத்தியதுடன் இரண்டு மாணவர்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்த அதிபர், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளார்.