இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கைக் குழுவொன்று எதிர்வரும் 9ஆம் திகதி ரஷ்யா செல்லவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கை அரசின் சார்பில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ரஷ்ய தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் கலந்துகொள்வார்கள். அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 9ஆம் திகதி ரஷ்யா செல்லவுள்ள இவர்கள் இருவரும் இம்மாதம் 15ஆம் திகதி வரை அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பல ஆரம்ப கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.