இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, தலைமையிலான சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தியது.

இதன்போது இரு தரப்பினரும் சாதகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

மின் கட்டண திருத்தம், மதுவரி திணைக்கள சட்டம் போன்ற கூடுதல் தகவல்களை சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது மற்றும் கோரப்பட்ட தகவல்களை வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் இன்றைய கூட்டத்தில் இணைந்து கொண்டதுடன், மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை (31) திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Next Post

பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக

Sat Aug 27 , 2022
பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய விசேட ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ரூபாவாக இருந்த நிலையில் அது தற்போது 47,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது என ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு […]

You May Like