தமிழ் மக்களை முடக்கி வைத்திருக்கும் ஒரு தோட்ட அதிகாரி

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை இம்புள்பே பிரதேச செயலகத்துக்குட்பட்ட நன் பேரியல் தோட்ட மக்களை தோட்ட அதிகாரி மக்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லாமல் அவரது கட்டுப்பாட்டுக்குள் முடக்கி வைத்து இருக்கின்றார்

நன் பேரியல் தோட்டமானது கடல் மட்டத்திலிருந்து ஏழாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கின்றது

நன் பேரியல் தோட்ட மக்களுக்கு அருகில் இருக்கும் நகருக்கு வருவதென்றால் இலகுவான காரியமல்ல காரணம் மலை உச்சியில் இருந்து அருகிலிருக்கும் நகரம் வருவதற்கு 30கிலோமீட்டர் தூரம் இருக்கின்றது போக்குவரத்து வசதிகளும் இல்லை முச்சக்கர வண்டியில் செல்வது என்றால் கட்டணம் ஏழாயிரம் ரூபாய் வண்டிக்கு கொடுக்க வேண்டும் மாதாந்த சம்பளமே வெறும் 8000 ரூபாய் பக்கல் நகரத்திற்கு வருவதென்றால்இலகுவான காரியமல்லை

அடிப்படை வசதிகளும் இல்லாமல் பின்தங்கிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் நன் பேரியல் தோட்ட மக்கள்

இவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு அன்னை அமைப்பின் ஸ்தாபகர் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்களும் அன்னை அமைப்பின் தலைவர் அருள் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு நன் பேரியல் மக்களுக்கு வழங்க சென்ற தருணத்தில் தோட்டத்திற்கு செல்லும் நுழைவாயில் தோட்ட அதிகாரியால் இவர்களை இடைநிறுத்தி தோட்டத்துக்கு செல்லமுடியாமல் தடுத்து வழிமறைத்தார்

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தோட்டத்திற்கு செல்லும் நுழைவாயில் பௌத்த பிக்குவும் அமைப்பின் தலைவர் அருள் அவர்களும் மாலை 6 மணி வரை போராடினார்கள் ஏழை எளிய குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை அவர்களுக்கு ஒப்படைப்பதற்காக.
ஆனால் பல எதிர்ப்புகள் தடைகள் தோட்ட அதிகாரியால் இவர்களுக்கு கிடைத்தது ஒரு மதகுரு என்ற அடிப்படையில் பௌத்த பிக்குவிக்கு எந்தவித மரியாதையும் தோட்ட அதிகாரியால் கிடைக்கவில்லை பல சவால்களுக்கு மத்தியில் பெரும் போராட்டத்தில் பௌத்த பிக்குவின் முயற்சியில் மக்களை இடையில் வரவழைத்து கொண்டு சென்ற உலர் உணவுப் பொருட்களை இடையில் சில குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கினார்கள் ஏனைய குடும்பங்களுக்கு எந்தவித பொருட்களும் வழங்க முடியாமல் போனது.

எதிர்பார்புகளோடு பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த அம் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச்செல்ல கூடிய
சூழ்நிலை ஏற்பட்டது அத் தோட்ட கொடூரமான செயளினால்

தோட்ட அதிகாரிக்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்வது பிடிக்கவில்லை
காரணம் தமிழ்பேசும் பௌத்த துறவி தோட்டத்துக்குள் சென்றாள் தோட்ட மக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை ஊக்குவிப்பார் தோட்ட மக்கள் வெளியேறி வேறு வேலைகளுக்கு செல்வார்கள் என்ற பயமும் இருக்கின்றது தோட்ட அதிகாரிக்கு.

ஆங்கிலேயர் காலத்தில் மக்கள் அடிமையாகி இருந்ததுபோலவே இப்பொழுதும் தமிழ் மக்களை அடிமையாக்கி சில தோட்ட நிர்வாகம் வைத்திருக்கின்றார்கள்
அரசியல்வாதிகளும் கவனிப்பது இல்லை

மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினால் மக்கள் தோட்ட நிர்வாகத்தில் வழங்கும் பொருட்களை எடுக்கமாட்டார்கள்.
தோட்டத்துக்கும் கடனாளியாகமாட்டார்கள் என்றும் தோட்ட அதிகாரி வழி மறைத்தார்
மாதத்திற்கு ஒருமுறை தோட்டத்தில் பொருட்களை வழங்கி அதிக விலையில் மக்களுக்கு கொடுத்து மக்களை கடனாளியாக வைத்து குறைந்த சம்பளம் வழங்குவது தோட்ட அதிகாரியின் நோக்கம்

பொதுவாக மலையகத்தில் மக்களின் நிலை இவ்வாராகத்தான் இருக்கின்றது பிள்ளைகளும் தரம் 5ந்து வரை மட்டுமே கல்வி கட்கின்றார்கள் பிறகு தாய் தந்தையர் போலவே பிள்ளைகளும் தோட்டத்து அடிமையாகி தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.
இதுவே மலையகத்தில் வாழும் சில தமிழ் பேசும் உறவுகளின் இன்றைய நிலை

ஆடி காற்றில் தோட்டத்தில் ஒரு வாரத்திற்கு 2 நாட்கள் மாத்திரமே வேலை தருகிறார்கள் தோட்ட நிர்வாகம்
அள்ளி வீசும் ஆடி காற்றில் வேலைகளையும் இழந்து வருமானமும் இல்லாமல் பசியில் தவிக்கும் மக்களுக்கு அன்னை அமைப்பினால் உலர் உணவு பொருட்களை வழங்குவது தவறா இதுவே ஏழைகளின் நிலையா

Next Post

கலாசார மண்டபத்தை திறந்து வைக்க மோடி யாழ்ப்பாணம் வருவார். அன்றைய தினம் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி.

Wed Jun 30 , 2021
?கலாசார மண்டபத்தை திறந்து வைக்க மோடி யாழ்ப்பாணம் வருவார். அன்றைய தினம் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி. யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu