அரகலய போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகநூல் பதிவை பகிர்ந்தமை மற்றும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு காலி நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.