இன்று (28) கேகாலை- கஹட்டபிட்டிய மற்றும் யாழ்ப்பாணம்- கந்தரோடை ஆகிய இடங்களில் வீட்டில் ? சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது. இச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கந்ரோடையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியில் இருந்தமையினால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
இதேவேளை கேகலையில் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக நீரை சூடாக்குவதற்காக அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இச்சம்பவங்களில் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படவில்லை.