மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, கம்மனகெதரவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

காரில் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ரி-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த குற்றத்தை செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இரு மகன்களும் உடனடியாக உயிரிழந்த நிலையில், தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பட்டம் தொடர்பிலான பிரச்சினையை அடிப்படையாக வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Next Post

மினுவாங்கொடை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது

Thu Oct 6 , 2022
மினுவாங்கொடை, கம்மனகெதரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயது தந்தையும் அவரது 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகன்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பட்டம் தொடர்பிலான பிரச்சினையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You May Like