குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாயின் உரிமையாளர்களும் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், அத்துடன் 12 நாட்களுக்குப் பிறகு நாய்க்கு சீழ் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அறிகுறிகளையடுத்து தங்கள் நாயை மற்ற நபர்களிடமிருந்தும் மற்ற செல்லப்பிராணிகளிடமிருந்தும் விலக்கி வைத்தனர்.
மனிதர்களிடையே பரவி வரும் இந்த நோயால் விலங்கிற்கும் பாதிப்பு இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து வைரஸ் மீண்டும் பிறழ்வு ஏற்பட்டு மனிதர்களைத் தாக்குமா என்பது குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.