சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

இருதரப்பு ரீதியாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், உற்பத்தித் தொழில் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

சீனப் பொருளாதாரப் புரட்சி தொடர்பான முன்னோடிகளை கருத்திற் கொள்வது போல பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் போலவே ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் சர்வதேச உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Tue May 30 , 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu