கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்யின் வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசுவொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசு வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிசுவை, சத்திர சிகிச்சையின் மூலம் வைத்தியர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.
சிசுவின் இறுதிக் கிரியைகள் கம்பளையில் இன்று (25) இடம்பெற்றது….