பிறக்கும்போது அரைவாசி உடம்புடன் பிறந்த 20 வயதேயான கானிம் அல்மிப்தாஹ் என்ற கத்தாரிய இளைஞர்.இவ்வாளிபர்

பீபா 2022 உலகக்கிண்ண காலபந்துத் தொடரின் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமேனுக்கு அருகில் கீழுள்ள இளைஞர் அல்குர்ஆன் வசனத்தை ஓதி ஆரம்பித்திருந்ததைப் பார்த்திருப்பீர்கள்.  அவர்தான் 20 வயதேயான கானிம் அல்மிப்தாஹ் என்ற கத்தாரிய இளைஞர்.

பிறக்கும்போது அரைவாசி உடம்புடன் பிறந்த இவ்வாளிபர் நம்பிக்கை இழக்கவில்லை…சளைக்கவில்லை.கவலைப்படவில்லை… முடியாது என்றிருக்கவில்லை.

தனது கைகளையும் சக்கர நாற்காலியையும் பயன்படுத்தி தனது வாழ்வில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்து வருகின்றார்.

கல்வி கற்றார்…முயற்சித்தார்… முன்னேறினார்.

கத்தாரில் மட்டுமல்ல உலகளவிலும் இன்று பிரபல்யமான ஒருவர்.

2022 உலகக்கிண்ணப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ தூதுவராக நியமிக்கப்பட்டார்.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் அல்குர்ஆனிய வசனத்தை ஓதிக் காண்பித்தார்.

ஒருமுறை வீடியோ ஒன்றில் கீழ்வருமாறு கூறுகின்றார்: ” என்னை இறைவன் அழகிய தோற்றத்தில்தான் படைத்துள்ளான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். பொறுமை, பிரார்த்தனை, இறைவனைப் புகழ்தல் போன்றவையே எனது வலிகளுக்கான மருந்துகள்” என்கிறார். உண்மையில் பிரமிப்பாக உள்ளது.

அவ்வளவு இறைவன் மீதான நம்பிக்கை!

இறைவன் வழங்கிய அழகான உடம்பையும் ஆரோக்கியத்தையும் வீணான விடயங்களில் கழித்து தமது வாழ்வை சீரழிக்கும் பலருக்கு இவர் மிகச்சிறந்த உதாரணம்.

எமது வாழ்வு பற்றி நிச்சயமாக மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

– பாஹிர் சுபைர் –

Next Post

போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை

Thu Nov 24 , 2022
ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் உள்ளது. இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu