80 இலட்சம் பெறுமதியான இரத்தினக்கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது..!!

80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை சட்டவிரோதமான முறையில் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று முன்தினம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியை சேர்ந்த 53 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு செல்வதற்காக எயார் ஏசியா விமானமான எப்டி-141 இல் செல்வதற்காக நேற்று இரவு 09.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவர் கொண்டு வந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாணிக்கக்கல் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரத்தினக்கற்களை பறிமுதல் செய்து பத்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - தற்போதைய நிலவரம் என்ன? (UPDATES)

Sun Jun 2 , 2024
பலத்த மழையினால் இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு அவிசாவளை , புவக்பிட்டிய பகுதியில் வௌ்ளத்தில் சிக்கி தந்தை, மகள் மற்றும் பேத்தி ஆகியோர் உயிரிழப்பு அவிசாவளை, ஹேவாஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 11 வயதான சிறுமி உயிரிழப்பு அதிக மழை காரணமாக பிரதான மற்றும் கரையோர மார்க்கங்களில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளது, ரயில்கள் தாமதமடையலாம் – ரயில்வே திணைக்களம் களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால், மல்வானை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu