பெரும்போகத்திற்கு தேவையான 30,000 மெட்ரிக் டொன் பொட்டாசியம் குளோரைட் உரங்கள் இன்று (13) மாலை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டன.
வெகுரோஸ் கப்பல் மூலம் லிதுவேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த உரங்கள் இன்று (13) இரவு அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அனுப்பப்படும்.