2019 ஆம் ஆண்டில், சுமார் 1.6 மில்லியன் வருமான வரி, VAT மற்றும் தேசிய மேம்பாட்டு வரி கோப்புகள் இருந்தன. ஆனால் 2020 இல் வரிச்சலுகைகளை வழங்கியதன் காரணமாக இவை 2021 டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 400,000 ஆகக் குறைந்தது. இதன் காரணமாக அரசாங்க வருமானம் குறைவால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாக இருந்தது –
அரசாங்கம் செயல்படுத்தும் பொருளாதார மற்றும் விவசாயத் திட்டமும், சர்வதேச நாணய நிதியத்தின்படி நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்புத் திட்டமும் எந்த வகையிலும் சீர்குலைந்தால், கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட நெருக்கடி போல நாடு மீண்டும் நெருக்கடியில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்