[youtube v=”INSERT-VIDEO-ID-HERE”]ஜூலை முதல் வாரத்தில் 2 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் கிடைக்கும் – சீன தூதரகம்
ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு 2 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் ஒவ்வொரு விமானத்திலும் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டுவரப்படும். ஜூலை மாதத்தில் இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் கிடைக்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது
இவை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது