இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரினை வழங்க சர்வதேச நாணய நிதியத்துடன் பணிக்குழு இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்ததாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்த கடன் திட்டமானது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.