அநுராதபுரம் – பண்டுலுகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கனரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் அநுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்..http://(News 1st)