ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனைக்கு கடத்திய 17 பேர் கைது

?ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனைக்கு கடத்திய 17 பேர் கைது. கொழும்பில் சம்பவம்

ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிறுமியின் தாய், விற்ற நபர், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் ஓட்டுநர்கள், ஒவ்வொரு இடத்திற்கும் சிறுமியை அழைத்துச் சென்றவர் மற்றும் சிறுமியை விற்ற விளம்பரத்தை பதிவிட்டவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ்மா அதிபரும் சட்டத்தரணி , பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கல்கிசையை சேர்ந்த ஒருவர் குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த சிறுமி சுமார் மூன்று மாதங்களுக்கு தலா 10,000 ரூபாய், 15,000 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 20 பேரின் விவரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

Next Post

சிமாட் போனில் அதிக நேரத்தை செலவிட்ட தங்கையை அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை

Wed Jun 30 , 2021
?சிமாட் போனில் அதிக நேரத்தை செலவிட்ட தங்கையை அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு தூத்துக்குடியில் இடம்பெற்றுள்ளது.   ஒன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக தந்தை , மகளுக்கு கடந்த ஆண்டு சிமார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஒன்லைன் வகுப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இது தொடர்பில் பல தடவைகள் அண்ணன் கண்டித்ததுடன் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu