ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு தொடர்ச்சியாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் விடுத்த கோரிக்கையை கோட்டை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
குறித்த தொகை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை அமைச்சருக்கோ எவருக்கும் வழங்க மாட்டோம் எனவும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகையை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை அந்தத் தருணத்தில் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே செய்துள்ளார். பணம் கிடைத்த இடத்திற்கு உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி அந்த இடத்தை படம் பிடித்து பணத்தை ஒப்படைத்தவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.