எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது..
மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தலா 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சனிக்கிழமை (24) எல்ல பிரதேசத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புல்வௌி, மரங்கள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. தீ வைத்த 16 மாணவர்களும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வன காப்பகத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய குழுவினர், அதன்பிறகு அப்பகுதியில் தீ வைத்துள்ளனர்.