?சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் அங்கு பணிபுரிபவர்கள் வித்தியாசமான ஆடைகள் அணிந்து பணிசெய்ததாகவும் இவை சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் இந்த ஆடைகளை ஒப்பிட்டுக் கூற முடியும் என சக்தி, சிரச, எம்.ரி.வி. செய்தி வெளியிட்ட நிலையில் ,..
சீன தூதரகம் இது தொடர்பில் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளது. சீன நிறுவன பணியாளர்கள் அணிந்திருப்பதை ஆடையை alibaba express இல் விற்பனையாகுவதாக படத்தை இணைத்துள்ளது. உலகில் சரிபார்ப்பு மற்றும் உண்மை தன்மை கட்டாயம் ஊடகத்தில் இருக்க வேண்டாமா? Clickbait அல்லது தவறான தகவல் ஒரு ஊடகத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும் என தூதரகம் தெரிவித்துள்ளது.