கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுவந்த 15 வயது சிறுமி கொரோனாவால் மரணம்..!

புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

புத்தளம் மணல்குன்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது அமீர் பாத்திமா ருகைய்யா எனும் 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த சிறுமி, மதுரங்குளி மேர்சி கல்வி வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர் எனவும் அவர் சொன்னார்.

இவ்வாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுமி உரிய நாட்கள் நிறைவடைந்து வீட்டுக்கு வந்த பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுமியின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அச்சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குறித்த சிறுமியின் ஜனாஸா உரிய சுகாதார முறைப்படி பொதி செய்யப்பட்டு புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு,

அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளதாகவும் புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

Next Post

கொவிட் தொற்றினால், வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்த 5 மாத சிசு

Wed Aug 25 , 2021
கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்யின் வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசுவொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளது. கம்பளை வைத்தியசாலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசு வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளது. உயிரிழந்த சிசுவை, சத்திர சிகிச்சையின் மூலம் வைத்தியர்கள் வெளியில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu