*ஒரே நாளில் 111 மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது

Thedal news ?Sri Lanka??

 

 

Next Post

நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்படுமா..?

Tue Aug 10 , 2021
அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொவிட் தொற்றினால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது. அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது […]

You May Like