இலங்கையிலுள்ள 100,000 குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.

இந்தக் கோரிக்கையின் பிரகாரம் முதற்கட்டமாக 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (11) பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் குரங்குகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், அதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புகையிரத பாதை திருத்தப்பணிகள் காரணமாக இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tue Apr 18 , 2023
மட்டக்களப்பு புகையிரத பாதையில் கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ நிலையங்களுக்கு இடையில் நெல்லியாகம பாதையில் 119 ஆவது மைல்கட்டுக்கு அருகில் உள்ள கடவுப்பாதை திருத்தப்பணிகள் காரணமாக இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 29ஆம் திகதி காலை 07.00 மணி முதல் 11.30 மணி வரை பகுதியளவிலும், முற்பகல் 11.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை முழுமையாகவும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu