நாளை 05 ஆம் திகதி முதல் அனுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத பாதை திருத்த பணிகள் காரணமாக வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் 05 மாதங்களுக்கு கொழும்பு கோட்டை தொடக்கம் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது..
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (33 billion ரூபா) இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது இந்திய அரசால் நடத்தப்படும் IRCON நிறுவனம் திருத்த பணிகளை மேற்கொள்கிறது.
27 இடங்களில் வேகக் கட்டுப்பாடுகள் உள்ளன, அங்கு ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ரயிலை இயக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட பிறகு குறைந்தபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆக இருக்கும்.
இந்நிலையில் நாளை அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை/ கல்கிசை நோக்கி புறப்படும் ரயில்களின் நேரம்
? உத்தர தேவி காலை 09.15
? யாழ்தேவி மாலை 14.00
? A/C intercity கடுகதி மாலை 16.32
? இரவு தபால் இரவு 23.10
? ரஜரட்டரெஜின காலை 05.00
கல்கிசை/கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி வழமையான நேரங்களில் புறப்படும்..
? ரஜரட்டரெஜின மதியம் 13.15
? உத்தர தேவி காலை 11.30
? யாழ்தேவி காலை 06.30 (கல்கிசை 05.50)
? A/C intercity கடுகதி காலை 05 45( கல்கிசை 05.10)
? இரவு தபால் இரவு 20.00
இதேவேளை யாழ்ராணி புகையிரதம் முறிகண்டியில் இருந்து வவுனியா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை 05 ஆம் திகதியில் இருந்து வவுனியா வரை சேவையில் ஈடுபடும்.
?காங்கேசந்துறையிலிருந்து வவுனியா நோக்கி காலை 06.00மணிக்கும்,
?வவுனியாவிலிருந்து காங்கேசந்துறை நோக்கி மாலை 15.00 மணிக்கும் புறப்படும்.
?#பஸ் சேவை
வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா அனுராதபுரத்திற்கு 20 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபட உள்ளன.
தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அநுராதபுரத்திற்கு சென்று அங்கிருந்து பயணிகள் ரயிலில் செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்யப்படுகிறது என வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.ஃ